ரஷ்யா-உக்ரைனின் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?..!

Published by
Edison

கடந்த 24-ஆம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்யா-உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவை உருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைபிடிப்பது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் தற்காலிக உடன்பாட்டை எட்டின.

அதன்படி,  உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய  நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,நேற்று உக்ரைன் – ரஷ்யா இடையே 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்நிலையில்,3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏதும் எட்டப்படவில்லை என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும்,போர் நடைபெறும் பகுதியில் இருந்து வெளியேறுவோருக்கான பாதுகாப்பான பாதைகளை செயல்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,இரு தரப்புக்கும் இடையில் சண்டையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிட் கெய்லோ தெரிவித்துள்ளார்.இதனிடையே,மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான பாதைகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று பேச்சுவாரத்தையின்போது ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

7 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

10 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

11 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

12 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

12 hours ago