சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் அவர் எப்படி என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
படப்பிடிப்புகள் தாமதமாக தொடங்க சிம்பு ஒத்துழைக்காமல் இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. அவை எல்லாம் உண்மையில்லை என்ற் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி கூறியுள்ளார். அதில் சிம்புவை தனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் என்றும், அவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ஒரே குடும்பத்தை போல என்றும் கூறியுள்ளார். மேலும் தனது படமான சென்னை 28படத்தை மதுரையில் விற்க உதவியதாவும், நீண்ட நாட்களாக அவருடன் பணியாற்ற விரும்பியதாகவும், தற்போது மாநாடு படத்தின் மூலம் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவரால் தான் படப்பிடிப்புகளில் பிரச்சினை வந்ததாக கூறியது உண்மையில்லை என்றும், சிம்பு குறித்து வெளியில் பேசுவதை கேட்கையில் ஆச்சரியமாக உள்ளதாகவும், அவர் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் வருவதோடு முழு ஒத்துழைப்பையும் தருகிறார் என்று சிம்புவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…