சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் .
தமிழ் சினிமாவில் தனக்கென்று இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.விரைவில் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு நள்ளிரவில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் . சூப்பர் ஸ்டார் ஸ்டைலுக்கும் , அந்த நடை,பேச்சுக்கு இப்போதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் .தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.