வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?
தென்னை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பல்வேறு பயன்களை தரும். அதில் தேங்காயில் இருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றவற்றை காட்டிலும் நிறைய நன்மைகளை கொண்டது. தேங்காய் எண்ணெய்யை பெரும்பாலும் நாம் முடி வளர்வதற்காகவே, தலைக்கு தடவ பயன்படுத்துவோம். இந்த எண்ணெய்யை நாம் பொதுவாக சமைக்க பயன்டுத்துவ கிடையாது.
ஆனால், நாம் எப்படி மற்ற எண்ணெய் வகைகளை உணவு சமைக்க பயன்படுத்துகிறோமோ, அதே போன்று கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான உணவாக சமைக்க பயன்படுத்த படுகிறது. வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக அளவில் நல்ல மாற்றங்கள் உண்டாகுமாம்.
ஞாபக திறன்
வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு பல மடங்கு உயரும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வேலையில் அதிக ஞாபக மறதி கொண்டோர், தேங்காய் எண்ணெய்யை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.
எடை குறைய
நம்மை மீறி நடக்கின்ற விஷயங்களில் ஒன்று உடல் எடை கூடுதல். இந்த பிரச்சினைக்கு விரைவிலே முடிவை கட்டுகிறது தேங்காய் எண்ணெய். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை சாப்பிட்டு வருவோருக்கு உடல் எடை கிடுகிடுவென குறையுமாம். அத்துடன் செரிமானமும் விரைவாக நடைபெறுமாம்.
புற்றுநோய் செல்கள்
தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் கீட்டோன் என்கிற மூல பொருளை உற்பத்தியாகிறது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக வயிற்று புற்றுநோயை முழுவதுமாக தடுக்கும்.
சிறுநீரக தொற்றுகள்
பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த சிறுநீரக தொற்றுகள் அதிக அளவில் ஏற்படும். பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையில் உருவாவதால் இந்த வித தொற்றுகள் உருப்பெறுகின்றன. இதை தடுக்கவும், தொற்றுக்களை நீக்கவும் தேங்காய் எண்ணெய்யை சாப்பிட்டு வந்தாலே போதும்.
கணையம், கல்லீரல்
இந்த தேங்காய் எண்ணெய் நமது கணையம் மற்றும் கல்லீரலையும் அதிக ஆரோக்கியத்துடன் வைக்கிறது. இவை அதிக ஆற்றலை தருவதால் இந்த உறுப்புகள் சீரான முறையில் வேலை செய்யும். இதோடு சேர்த்து இதயத்தையும் பாதுகாக்கும்.
குறிப்பு :
தேங்காய் எண்ணெய் மேற்சொன்ன பயன்களை தர வேண்டுமெனில் சரியான அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவை விட அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.