“அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” விளாசித்தள்ளிய முதல்வர் மகன்..!!
ஹைதராபாத்;
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் கூறியுள்ளார்.மேலும், தெலுங்கானா பற்றிப் பேச பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அருகதை இல்லை என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியானது, தெலுங்கானா மாநிலத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில், சட்டப்பேரவையை அண்மையில் கலைத்தது. இதனை, பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்திருந்தார். மக்களின் வரிப்பணத்தை தேர்தலுக்காக செலவிடுவதன் மூலம், சந்திரசேகர ராவ், மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுகிறார் என்று அவர் கூறியிருந்தார்.இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, சந்திரசேகர ராவ் மகனும், தெலுங்கானா மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ராமராவ், அமித்ஷாவை சாடியுள்ளார்.
அப்போது அவர் “பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது 2002-இல் முன்கூட்டியே தேர்தலை நடத்தவில்லையா? 2004-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்கூட்டியே தேர்தல் நடத்தவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், “தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களுக்கு எந்த நிதியுதவியையும் செய்யாத மத்திய பாஜக அரசு, அந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க எந்த தகுதியும் கிடையாது; அவர்கள் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் வெற்றி பெற முடியாது” என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU