விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கிய திரைப்படம் துப்பறிவாளன் 2.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றதும் ,அது முடிவடைந்த பின் படத்தில் வைத்த பொருட் செலவு உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே வாக்குவாதம் ஏற்பட மிஷ்கின் துப்பறிவாளன் -2 படத்திலிருந்து விலகினார்.
அதன் பின் அந்த படத்தினை விஷாலே இயக்குவதாக கூறப்பட்டது.இதில் அஷ்யா, ரகுமான், கவுதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.கடந்தாண்டு வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு எதுவும் இதுவரை நடைபெறவில்லை.நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட படப்பிடிப்பானது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த.அதன் பின் விஷால் சக்ரா ,எனிமி உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தியதால் இந்த படத்தினை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.ஆம் விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் வைத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அங்கு லாக்டவுனில் தளர்வுகள் அறிவித்ததும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விஷால் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…