ரஜினியின் அவசர அறிக்கை ! அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக கூறுகிறாரா?
ரஜினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என மறைமுகமாக அவரே கூறுவதாக தெரிகிறது.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் கொரோனா பரவலால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.
மேலும் அந்த அறிக்கையில், ரஜினி அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை” என தெரிவித்துள்ளார்.
Hmm! @rajinikanth ???? pic.twitter.com/c3ryNP2BA7
— Jooreyaaaa (@thelpatrising) October 29, 2020
அதுமட்டுமின்றி, தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை உண்மை என கூறினார். அதில் ரஜினி அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அது தன்னுடைய அறிக்கை இல்லையென ரஜினி கூறியிருந்தால், அவரின் அரசியல் பயணம் தொடங்கும் என நாம் எதிர்பார்த்து இருக்கலாம்.
இதன்மூலம் அவர் மறைமுகமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என அவரே தெரிவித்ததாக தெரிகிறது. இதேபோல நவம்பர் மாதத்தில் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி தெரிவித்துள்ளதாக தகவல் வந்தது. அதற்கு ரஜினிகாந்த், அந்த அறிக்கை தன்னிடம் இருந்து வரவில்லை எனவும், தன்னை சார்ந்த நபர்களிடமிருந்து வந்ததாகவும், அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கைக்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
ரஜினி கட்சி தொடங்குவார் என்ற அழுத்தங்கள் இருப்பதன் காரணமாக அவர் கட்சி தொடங்கும் நோக்குடன் இருந்து வந்தார். ஆனால் தற்பொழுது வெளிவந்துள்ள அறிக்கை மூலம், தனது உடல்நிலையை காரணம்காட்டி கட்சி தொடங்கும் பணிக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.