தமிழ் சினிமாவில் “பசங்க” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இந்த படத்தை தொடர்ந்து வம்சம், மெரினா, கேடிபில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம விட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனையடுத்து, ரஜினியின் பயோபிக்கை படமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பாண்டிராஜ் இதுகுறித்து விளக்கமாக பேசியுள்ளார். இதில் பேசிய அவர் “முதலில் என்னிடம் ரஜினி சாருடைய பயோபிக் படத்தை பண்ண சொல்லி என்னிடம் கேட்டிருந்தார்கள்.. ஆனால் அப்போது நான் வேறொரு கமிட்மென்டி-ல் இருந்தேன். அதனால் என்னால் அந்த படத்தை பண்ண முடியவில்லை.
பசங்க படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் போன் செய்து என்னை அழைத்து பாராட்டினார்.. அடுத்ததாக 2 மணி நேரம் அவர் அவருடைய வாழ்க்கையில் நடந்த கதைகளை என்னிடம் கூறினார்…அந்த தருணம் மிகப்பெரிய தருணம்…ரொம்ப சந்தோஷமாக இருந்தது…அந்த கதையும் பண்ணமுடியாமல் போனது..” என கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…