ரஜினியின் படத்தை எடுக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன.? பாண்டிராஜ் விளக்கம்.!

Default Image

தமிழ் சினிமாவில் “பசங்க” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். இந்த படத்தை தொடர்ந்து வம்சம், மெரினா, கேடிபில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம விட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

pandiraj

இந்த படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதனையடுத்து, ரஜினியின் பயோபிக்கை படமாக இயக்குனர் பாண்டிராஜ்  இயக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த பாண்டிராஜ்  இதுகுறித்து விளக்கமாக பேசியுள்ளார். இதில் பேசிய அவர் “முதலில் என்னிடம் ரஜினி சாருடைய பயோபிக் படத்தை பண்ண சொல்லி என்னிடம் கேட்டிருந்தார்கள்.. ஆனால் அப்போது நான் வேறொரு கமிட்மென்டி-ல் இருந்தேன். அதனால் என்னால் அந்த படத்தை பண்ண முடியவில்லை.

பசங்க படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் போன் செய்து என்னை அழைத்து பாராட்டினார்.. அடுத்ததாக 2 மணி நேரம் அவர் அவருடைய வாழ்க்கையில் நடந்த கதைகளை என்னிடம் கூறினார்…அந்த தருணம் மிகப்பெரிய தருணம்…ரொம்ப சந்தோஷமாக இருந்தது…அந்த கதையும் பண்ணமுடியாமல் போனது..” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்