புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன..? அதன் சிறப்புகள் அறியலாம் வாருங்கள்..!

புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படும்.
இந்த புனித வெள்ளியை தொடர்ந்து, மூன்றாம் நாள் இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புனித வெள்ளி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது இயேசுவின் சீடராகிய யூதாஸ் காரியோத்து என்பவர் 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டி கொடுப்பர். பின் இயேசு ஜெருசலேம் காவலர்களால் கைது செய்யப்பட்டு முள் முடி சூட்டப்பட்டு, பாரமான சிலுவையையை சுமத்தி கல்வாரி மலைக்கு அழைத்து சென்று அங்கு சிலுவையில் அறையப்பட்டார்.
இந்த புனித வெள்ளி அன்று இயேசு பல துன்பங்களை அனுபவித்ததால் இயேசுவை பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களும், இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் வகையில் அன்றைய தினம் சாப்பிடாமல் இருந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அன்றைய தினம் முழுவதும் சிலுவைபாடுகளை நினைவுகூர்ந்து கருப்பு நிற உடையணிந்து துக்கமுகத்துடன் காணப்படுவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025