கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்திற்கான பொருட்செலவு எவ்வளவு என்று கெளதம் மேனன் வெளிப்படுத்துகிறார் .
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றது. ஐபோனில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக வெளியிட்டிருந்ததனர். வீட்டில் இருந்தபடி எடுத்த இந்த குறும்படத்தின் பொருட்செலவு குறித்து இயக்குநர் கௌதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஐபோனில் குறும்படம் எடுப்பதற்காக Rig ஒன்று வாங்குனேன். எனக்காகவும், நான் கேட்டதற்காகவும் மட்டுமே சிம்பு மற்றும் திரிஷா இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டனர். மேலும் என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அவர்களிடம் கூறிய போது, சிறுபிள்ளை தனமாக பேசாதீர்கள், இந்த குறும்படத்தை எடுப்போம் என்று முன் வந்தார்கள். இதற்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் வெளியிலிருந்து இசை கலைஞர்களை வைத்து வாசிக்க வைத்தார். மேலும் சோனியா மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இசையை பயன்படுத்தினோம். மேலும் இதனை என்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளதால் அதில் வரும் பணத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுப்பேன் என்றும், இதுவரை இந்த குறும்படத்திற்காக செலவழிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…