முதல்வரின் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு?- சீமான் சந்தேகம்!
முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் ஜனவரி 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள நிலையில், அவருக்கு உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 4 ஆண்டுகளாக சசிகலா உடல் நிலையில் ஒன்றுமில்லாத நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.