என்னது மறுபடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியா? கொண்டாடும் பிக்பாஸ் ரசிகர்கள்!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீண்டும் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பபடுவதாக விஜய் டிவியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலமாகி உள்ள நிலையில், நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சியின் வின்னராக வந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என பிக்பாஸ் நிகழ்ச்சி விரும்பிப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது மீண்டும் இந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட போகிறதாம். அதாவது விஜய் டிவியில் அல்ல, இந்த முறை விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram