இரவில் பீன்ஸ் மற்றும் கேரட் சாப்பிட்டால் என்ன நன்மை
பீன்ஸ்:
நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது.
இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை பருகி வந்தால், நீண்ட நாள் ஆறாதா வாய்புண், குடல்புண் விரைவில் ஆறிவிடும்.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு பிரச்சனை விரைவில் நீங்கி விடும்.மூல நோய் பிரச்னை இன்று அதிகமானோருக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு பீன்ஸ் ஒரு சிறந்த உணவாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இந்த விடுபடலாம்.
கேரட்:
உடலில் இருக்கும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை அறைத்து தடவினால் மிகவும் நல்லது.
மேலும் தோலில் ஏற்படும் பிரச்னை மற்றும் புண்களை கேரட் ஆற்றும் மேலும் கேரட் கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மேலும் வீக்கம், வலியை கரைக்க கூடியது.கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கான ஜூஸ் தயாரிக்கலாம்.
ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
கோடைகாலத்தில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும். நாக்கு, தொண்டை, குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.
கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும். வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு நன்மை தரும்.
கேரட்டை இரவில் மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நீங்கி பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். கேரட்டை பயன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். கேரட்டை பசையாக அரைக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வேண்டும்.
இதை வடிக்கட்டி குடித்துவர புண்கள் ஆறும். நரம்பு மண்டலங்கள் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஈரல் பலம் அடைகிறது. ரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் குளிர்ச்சி தருகிறது. தோலுக்கு வண்ணத்தை தருகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…