கிறிஸ்துமஸ் என்றால் என்ன ?
கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழா. இது இந்தியாவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் எங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பொருட்களை பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக இந்த விழாவின் போது இடம் பெரும் சிறப்பு நிகழ்வுகள் ஆகும்.
இந்த விழாவின் முக்கிய நோக்கமே ஏழைகளுக்கு உதவுதல் தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வாக்குக்கு ஏற்ப பலருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் இந்த விழாவின் முக்கிய நோக்கம் ஆகும்.