#Unlock 3.0 : டெல்லியில் எதற்கு அனுமதி உண்டு ? அனுமதி கிடையாது ?
மத்திய அரசு நேற்று UNLOCK 3.O என்று தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது .இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வியாழக்கிழமை ‘அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் அதே வேளையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளது .
எதற்கெல்லாம் தளர்வுகள் :
- சமூக இடைவெளிகளுடன் வாரச்சந்தை 7 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக நடத்த அனுமதி அளிக்கப்படும் .
- தெரு வியாபாரிகள் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
- உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் ,அதே வேளையில் அவை கொரோனா தடுப்பு மையங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருக்க வேண்டும் .
- மருத்துவம் சார்ந்த செயல்களுக்கு வழிகாட்டுதலின் படி அனுமதி அளிக்கப்படும் .
இதற்கு தளர்வுகள் கிடையாது :
- யோகா மையங்கள் ,உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை .
- மெட்ரோ ரயில் சேவைக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு .
- திரையரங்குகள் ,பொழுதுபோக்கு பூங்காக்கள் ,மால்கள் ,நீச்சல் குளங்கள் ,பார்கள் ,அரங்கங்கள் இது போன்ற இடங்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது .
- அனைத்து சமூக கூட்டங்கள் , அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது .