ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.
பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக உள்ளனர்.
இதுபற்றி மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுதேஷ்னா ரே கூறுகையில், கருத்தடை என்பது ஒரு பெண்ணின் பொறுப்பு என்று ஆண்கள் பெரும்பாலும் கருதுகின்றனர். கருத்தடை மருந்துகள், கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படும் வெவ்வேறு பெண் கருத்தடைகளைப் பற்றி பார்ப்போம்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்தடை சாதனங்கள் கருத்தடைக்கான நிரந்தர முறைகள் அல்ல, அவற்றை பயன்படுத்தப்படவில்லை என்றால் கருவுறுதல் உருவாகும்.
Female Diaphragm or Cervical cap உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் செருகப்பட வேண்டிய சாதனங்கள். அவை கப் வடிவிலானவை, கொஞ்சம் ஆழமற்றவை. இவை விந்தணுக்களை செயலிழக்கச் செய்யும் விந்தணு ஜெல் மூலம் நிரப்பப்படுகிறது. ஹார்மோன் அல்லாதவை மற்றும் விந்தணுக்கள் கருப்பையில் வராமல் தடுக்க ஒரு தடையாக மட்டுமே செயல்படுகின்றது. இவற்றின் தோல்வி விகிதம் சுமார் 17 % Female Diaphragm or Cervical cap ஆன்லைனில் கிடைக்கின்றன.
பெண் ஆணுறை என்பது கருத்தடைக்கான மற்றொரு முறையாகும். இந்த முறை அங்கீகாரம் பெற்று பிரபலமடைந்து வருகிறது. இது உடலுறவுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன் பெண்ணுறுப்பில் செருகப்பட வேண்டும். இருப்பினும் இது செயல் முடிந்த உடனேயே அகற்றி விட வேண்டும். இதற்கான தோல்வி விகிதம் சுமார் 14 % ஆகும்.
பெண் ஆணுறைகள் ஆன்லைனில் கிடைக்கின்றது. மேலும் கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்ய பெண்களுக்கு இது உதவுகிறது. பெண் ஆணுறைகளால் மட்டுமே பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது நோய்களை தடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது ஒரு மென்மையான வட்டு வடிவ கடற்பாசி ஆகும், இது விந்தணுக்களைக் செயலிழக்கச் செய்யும் ஜெல் மூலம் நிரப்பப்படுகிறது. இது உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் ஆழமாக செருகப்பட வேண்டும். உடலுறவுக்குப் பிறகு குறைந்தது ஆறு மணிநேரம் கடற்பாசி உள்ளே இருக்க வேண்டும்.
கருத்தடை கடற்பாசி சுமார் 24 மணி நேரம் பெண்ணுறுப்பில் இருக்கக்கூடும். இதன் வழக்கமான தோல்வி விகிதம் சுமார் 14-27 % ஆகும். குழந்தைகளைப் பெறாத பெண்களைக் காட்டிலும் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்று டாக்டர் சுதேஷ்னா ரே கூறினார்.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…