பெண் ஆணுறை என்றால் என்ன..? அதை பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாருங்கள் தெரிந்துகொள்வோம் ..!

Default Image

ஆண்களுக்கான ஆணுறையைப் பற்றி பலரும் அறிந்ததே. ஆனால் பெண்களுக்கான  கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவுது பற்றியும் அதில் உள்ள பாதுகாப்பு முறைகள் பற்றி ஆகியவை பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன அதைப்பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

பெண் கருத்தடை என்பது கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படும் சாதனங்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்ணிடம் உள்ளது என இந்திய புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதனால், பெண்கள் கருத்தடைகளைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அதை பற்றி தெரியாதவர்களாக உள்ளனர்.

இதுபற்றி மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுதேஷ்னா ரே கூறுகையில், கருத்தடை என்பது ஒரு பெண்ணின் பொறுப்பு என்று ஆண்கள் பெரும்பாலும் கருதுகின்றனர். கருத்தடை மருந்துகள், கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படும் வெவ்வேறு பெண் கருத்தடைகளைப் பற்றி பார்ப்போம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள கருத்தடை சாதனங்கள் கருத்தடைக்கான நிரந்தர முறைகள் அல்ல, அவற்றை பயன்படுத்தப்படவில்லை என்றால் கருவுறுதல்  உருவாகும்.

சர்விகல் கேப் (Cervical cap):

Female Diaphragm or Cervical cap உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் செருகப்பட வேண்டிய சாதனங்கள். அவை கப் வடிவிலானவை, கொஞ்சம் ஆழமற்றவை. இவை விந்தணுக்களை செயலிழக்கச் செய்யும் விந்தணு ஜெல் மூலம் நிரப்பப்படுகிறது. ஹார்மோன் அல்லாதவை மற்றும் விந்தணுக்கள் கருப்பையில் வராமல் தடுக்க ஒரு தடையாக மட்டுமே செயல்படுகின்றது. இவற்றின் தோல்வி விகிதம் சுமார் 17 %  Female Diaphragm or Cervical cap ஆன்லைனில் கிடைக்கின்றன.

பெண் ஆணுறை (Female Condom):

பெண் ஆணுறை என்பது கருத்தடைக்கான மற்றொரு முறையாகும். இந்த முறை அங்கீகாரம் பெற்று பிரபலமடைந்து வருகிறது. இது உடலுறவுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன் பெண்ணுறுப்பில் செருகப்பட வேண்டும். இருப்பினும் இது செயல் முடிந்த உடனேயே அகற்றி விட வேண்டும். இதற்கான தோல்வி விகிதம் சுமார் 14 % ஆகும்.

பெண் ஆணுறைகள் ஆன்லைனில் கிடைக்கின்றது. மேலும் கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்ய பெண்களுக்கு இது உதவுகிறது. பெண் ஆணுறைகளால் மட்டுமே பாலியலால் பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது நோய்களை தடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண் கருத்தடை கடற்பாசி:

இது ஒரு மென்மையான வட்டு வடிவ கடற்பாசி ஆகும், இது விந்தணுக்களைக் செயலிழக்கச் செய்யும் ஜெல் மூலம் நிரப்பப்படுகிறது. இது உடலுறவுக்கு முன் பெண்ணுறுப்பில் ஆழமாக செருகப்பட வேண்டும். உடலுறவுக்குப் பிறகு குறைந்தது ஆறு மணிநேரம் கடற்பாசி உள்ளே இருக்க வேண்டும்.

கருத்தடை கடற்பாசி சுமார் 24 மணி நேரம் பெண்ணுறுப்பில் இருக்கக்கூடும். இதன் வழக்கமான தோல்வி விகிதம் சுமார் 14-27 % ஆகும். குழந்தைகளைப் பெறாத பெண்களைக் காட்டிலும் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்று டாக்டர் சுதேஷ்னா ரே கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi