வேறு பெண்ணுடன் நிச்சயம் ஆன பின் காதலித்த பெண்ணுடன் தனி வீட்டில் வசித்த காதலன், நடந்தது என்ன?
சென்னையில் திருமணம் செய்துகொள்வதாக தனது காதலிக்கு ஆசை வார்த்தை கூறி தனி வீட்டில் வசித்து வந்த நபர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு உள்ளதை கண்டு காதலி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 28 வயதான பூஜா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு 33 வயதான தினேஷ் என்பவருக்கும் அறிமுகமாகி இருவரும் நட்பாக பழகினர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பூஜாவை காதலிப்பதாக தினேஷ் கூறியுள்ளார். ஆனால் படிப்பு முடிந்து பூஜா மும்பைக்கு கிளம்பியதால் பெற்றோரிடம் திருமணதிற்கு பேசும் படி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பூஜா காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானம் மூலம் பூஜாவை சென்னைக்கு வரவழைத்து கிழக்கு கடற்கரை சாலையில் தனி வீடு எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது பூஜா கருவுற்று ஒரு முறை கருவையும் கலைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது தந்தை உயிரிழந்து விட்டதாக கூறி தனது சொந்த ஊரான திருச்சிக்கு சென்ற தினேஷ் ஒரு வாரம் பூஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினாலும் அதன் பின்பு பேசவே இல்லை காரணம் தெரியாமல் பூஜா இருந்த வேளையில், ஒரு நாள் ஃபேஸ்புக்கில் தினேஷ் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அது குறித்து தினேஷின் உறவினரிடம் கேட்ட போது தான் தினேஷிற்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்பு தான் பூஜாவை சென்னைக்கு வரவழைத்து லிவிங் டுகெதராக வாழ்ந்துள்ளார். தற்போது பூஜாவை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா என்ன செய்வது என்று தெரியாமல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தேசிய பெண்கள் ஆணையத்தில் .புகார் அளித்துள்ளார் மேலும் அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடையாறு துணை ஆணையரிடம் நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மூன்று முறைக்கு மேல் புகார் அளித்தும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பெண்களுக்கு எதிராக தவறான நோக்கத்துடன் செயல்படும் ஆண்கள் மீது நிச்சயம் காவல்துறையினர் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற குற்றங்கள் தொடரத்தான் செய்யும்.