சுண்டி விரலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கும் எளிய வழி?
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய பல வழிகள் உள்ளன. அவரின் உடை, நடை, பாவனை போன்றவற்றை கொண்டு கண்டுபிடிப்பது பழைய காலத்து முறை. ஆனால், மிக எளிமையாக ஒரு சில புதுவித முறைகளை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடித்து விடலாமாம்.
அவற்றில் மிக முக்கியமான மற்றும் எளிமையான வழி சுண்டி விரலை வைத்து கண்டுபிடிக்கும் வழி தான். இந்த முறையை வைத்து உங்கள் காதலி, நண்பர் மற்றும் மேலும் பலரின் அடையாளத்தை உங்களால் அறிந்து கொள்ள இயலும்.
சிறிய விரல்
சுண்டு விரல் மிக சின்னதாக இருந்தால் மிகவும் கூச்ச சுபாவம் நிறைந்தவராக இருப்பார்கள். ஆனால், இவர்களை லேசாக நாம் எடை போட்டு விட கூடாது. ஏனெனில், இவர்கள் பல கனவுகளையும், அதற்கான வழிகளையும் தெளிவாக அறிந்திருப்பார்கள்.
சமமான விரல்
உங்களின்சுண்டு விரல் மோதிர விரலுக்கு சமமான அளவில் இருந்தால், வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்லும் திறன் உங்களுக்கு இருக்கு என்று அர்த்தம். எப்போதுமே புன்னகையுடன் நீங்கள் வலம் வருவீர்கள். சில சமயங்களில் கோபமும் உங்களுக்கு உண்டாக கூடும்.
நெட்டை விரல்
சுண்டு விரல் நீண்டு இருந்தால் அதற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதாவது, இப்படிப்பட்ட விரல் அமைப்பு கொண்டவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக சிறிது பேசி, ஜாலியாக பழகுவார்கள். பொதுவுடைமை தன்மை இந்த நெட்டை விரல்காரர்களுக்கு அதிகம். எதையுமே எளிதில் சமாளிக்கும் திறன் இவர்களுக்கு அதிகம்.
குறிப்பால் உணர்த்தும்
உங்களின் சுண்டு விரலின் மேல் பகுதி எதோ ஒன்றை குறிப்பது போன்று இருந்தால், நீங்கள் அதி புத்திசாலிகள் வகையை சேர்ந்தவர்கள். சிறப்பான எழுத்தாளராகும் தன்மை உங்களுக்கு இருக்கும். மேலும், வருகின்ற பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் தன்மை உங்களுக்கு உண்டு.
வளைந்த விரல்
வளைந்த தன்மையுடன் உங்களின் சுண்டு விரல் இருந்தால் அதற்கென்று ஒரு அர்த்தம் உள்ளது. இந்த வகை விரல் கொண்டோர் நியாயத்திற்காக எப்போதுமே போராடுவார்கள். ஆனால், பிறர் இவர்களை புரிந்து கொள்வது தான் சற்று கடினம். கூடவே உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு அதிகம்.