உக்ரைன் அதிபரிடம் மோடி என்ன பேசினார்..?
வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஸெலென்ஸ்கியிடம் மோடி கோரிக்கை விடுத்ததாகவும், பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அப்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமரை கேட்டுக் கொண்டதாக கேட்டுக்கொண்டதாக ட்விட் செய்துள்ளார். மேலும், இந்த உரையாடலின்போது ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைன் போர் நிலவரம் குறித்தும் எடுத்துரைத் துள்ளார். உக்ரைன் குடியிருப்புகளின் மீது ரஷ்யா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மோடியிடம் செலன்ஸ்கி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி, ‘உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஸெலென்ஸ்கியிடம் கவலை தெரிவித்ததாகவும், அங்கிருக்கும் இந்திய மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உக்ரைன் விரைவாக உதவ வேண்டும் என்றும், வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி ஸெலென்ஸ்கியிடம் மோடி கோரிக்கை விடுத்ததாகவும், பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.