பகலில் சாப்பிட்ட பின் நமக்கு தூக்கம் வருவதற்கு என்ன காரணம்…? இதனை எப்படி தவிர்க்கலாம்..?

Published by
லீனா

பகலில் நம் சாப்பிட்ட பின் சோர்வு ஏற்பட என்ன காரணம்?

‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பது பழமொழி. ஆனால் அது பழமொழியாக இருந்தாலும் பொதுவாகவே பகலில் சாப்பிட்டபின் அனைவருமே ஒரு தூக்கம் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு. சிலவகை உணவுகளை உட்கொண்ட பின் நமது உடலில் ஆற்றல் மட்டத்தில் ஏற்படக்கூடிய குறைவு காரணமாக தான் இந்த சோர்வு ஏற்படுகிறது. இது போஸ்ட்ராண்டியல் சோமனலன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது இந்தப் பதிவில் ஒரு நபர் உணவுக்குப்பின் சோர்வாக இருப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் உண்ணுகின்ற உணவு வகையை பொறுத்தவரையில், கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் கொண்ட உணவை சாப்பிட்டால் அது தூக்கத்தை ஏற்படுத்த கூடும். இந்த உணவினை சாப்பிடும்போது நமது உடலில் அதிக அளவிலான செரோடோனின் உற்பத்தி செய்யப்படுகிறது. செரோடோனின் என்பது ஒரு வேதிப்பொருள். இது மனநிலை மற்றும்  தூக்க சுழற்சியை  ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் புரதச் சத்து நிறைந்த பல உணவுகளில் காணப்படுகிறது. இது உடலில் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது.

புரதம் நிறைந்த உணவுகள்

  • கோழி
  • இறைச்சி
  • முட்டை
  • கீரை
  • பால்
  • சோயா பொருட்கள்

ஆகியவை புரதசத்து நிறைந்த உணவுகளாகும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு 

  • பாஸ்தா
  • அரிசி
  • வெள்ளை ரொட்டி
  • கேக்
  • குக்கிகள்
  • டோனட்
  • பால்
  • சர்க்கரை
  • மிட்டாய்

போன்றவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் ஆகும்.

மதிய உணவிற்குப்பின் நமது உடல் சோர்வாக இருக்கும் போது, எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தையும் செலுத்தி செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும். வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்குபவர்களுக்கு இந்த சோர்வு நிலை பல ஆபத்துகளை விளைவிக்க கூடும்.

உணவுக்குப்பின் ஏற்படும் சோர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  • சாப்பிடும்போது அதிகமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுங்கள். அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்ளும் போது அது நமது உடல் நிலையில் சோர்வு நிலைக்கு தள்ளுகிறது.
  • சில மணி நேரங்களுக்கு ஒரு தடவை தின்பண்டங்களை சாப்பிடுங்கள். அடிக்கடி நீர் அருந்தலாம்.
  • இரவில் போதுமான அளவு தூங்குங்கள். இரவு நேரத்தில் தூக்கம் குறையும் பட்சத்திலும் மதிய உணவிற்குப்பின் நமது ஆற்றல் குறைந்து உடல் சோர்வாக காணப்படும்.
  • பகலில் உணவு உட்கொண்டபின் லேசான நடைப்பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பகலில் சற்று நேரம் தூங்குவது சிறந்தது.
  • சாப்பாட்டுடன் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள். ஆல்கஹால் நம்மை சோர்வடையச் செய்யக் கூடிய தன்மை கொண்டது.
Published by
லீனா

Recent Posts

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

4 mins ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

1 hour ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

2 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

3 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

4 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

4 hours ago