எலுமிச்சை பழசாற்றில் இவ்வளவு நன்மைகளா..??
லெமன் நீரால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள் பற்றித் தெரியுமா?
நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. அதனால் தான் தண்ணீர் என்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சில நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் கூடு நம்மால் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.
லெமன் ஜூஸ்
லெமன் ஜூஸ் உங்களுக்கு மிகவும் நல்லது. லெமன் ஒரு சிட்ரஸ் பழம். பொதுவாக சிட்ரிக்அமிலத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலில் உள்ள நச்சு செல்களிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது.
எலுமிச்சையில் அதிக அளவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி,சி,டி ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு கால்சியமும் மக்னீசியம் நிறைந்திருக்கும் பழங்களில் மிக முக்கியமானது எலுமிச்சை. அத்தகைய சருமம் தலைமுடி முதல் உடல் எடை குறைத்தல், புற்றுநோய்க்கு மருந்து, நோய்த்தொற்றை சரிசெய்தல் ஆகியவற்றுக்கு எப்படி தீர்வாக அமைகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக்க புத்துணர்வாக வைத்து இருக்க நிறைய பியூட்டி பொருட்களைப் பயன்படுத்தி பணத்தை செலவழிப்பீர்கள். ஆனால் உங்கள் முகத்தை புத்துணர்வாக வைத்திருக்க வெறும் லெமன் வாட்டர் போதும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் சி போன்றவை சரும கொலாஜனை வலிமையாக்கி சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது. சில சரும பராமரிப்பு பொருட்களில் இந்த விட்டமின் சி, ப்ளோனாய்டுகள் அதிகமாக சேர்க்கப்படும். ஆனால் இந்த லெமன் ஜூஸை நேரடியாக சருமத்தில் தடவி வெளியே செல்ல வேண்டாம். ஏனெனில் சூரியக்கதிர்களால் பைட்டோ போட்டோடெர்மாடிஸ் என்ற வலிமிகுந்த சரும எரிச்சலை ஏற்படுத்தி விடும்.
லெமன் நீர் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உணவை உண்ணும் போது அதிக உமிழ்நீரை சுரக்க செய்து எளிதில் சீரணமாக உதவுகிறது. மேலும் ப்ளோனாய்டுகள் சீரணிக்கும் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது நெஞ்செரிச்சல், எதுக்களித்தல், அசிடிட்டி பிரச்சினைகள் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் 2 டீ ஸ்பூன் லெமன் சாறு கலந்து சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்னால் குடித்தால் போதும் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
லெமன் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. 30 நிமிட உடற்பயிற்சி, பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் தினமும் காலையில் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல் எடையில் மாற்றத்தை காணலாம்.