பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

Default Image

பழங்கள் என்பது இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள சத்து நிறைந்த ஒரு பொக்கிஷம். இந்த பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பழம் சாப்பிடும் முறை மற்றும் நேரம்

காலை வேளையில் ஏதேனும் ஒரு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் பொழுது தான் நமது உடலுக்கு ஆரோக்கியமும் அந்த பழத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துக்களும் கிடைக்கிறது. சாதாரணமாக நாம் ஒரு உணவை சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு பழத்தை சாப்பிடும் பொழுது அந்த பழம் வயிற்றுக்குள் நேரடியாக செல்வதில்லை. அந்த உணவுக்குப் பின் பழம் வருவதால் உணவுடன் சேர்ந்து இரண்டும் அழுகி, புளித்து அமிலமாக மாறுகிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும், வயிற்று வலியும் ஏற்பட இது காரணமாகின்றது. ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் பொழுது தலையில் வழுக்கை விழுவது, நரைமுடி ஏற்படுவது, ஆகிய பிரச்சினைகள் நீங்க உதவுகிறது.

மேலும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க உதவுவதுடன், கண்களுக்கு கீழ் ஏற்படக்கூடிய கருவளையங்கள் நீங்கவும் உதவுகிறது. மேலும் காலை நேரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சாப்பிடுவது மிகவும் நல்லது. கார்போஹைட்ரேட் இந்த பழங்களில் அதிகம் இருப்பதால் காலை வேளையில் சாப்பிடுவது மிகச் சிறந்தது. உடலை சுத்தப்படுத்த கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றான இந்த பழத்தில், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி செரிமான மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றலுள்ளது. பழங்களை தொடர்ந்து வெறும் சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் இந்த பழங்களில் நொதிகள் அதிகம் காணப்படுவதால் உடலின் பல்வேறு இயக்கத்திற்கு இது உதவுகிறது. எனவே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்