என்ன ஒரு ஆச்சரியம்…! பிறக்கும் போதே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை…!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளல் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த பெண் 36 வாரங்கள், மூன்று நாட்கள் கர்ப்பிணியாக இருந்தபோது மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார.
தடுப்பூசி எடுத்துக் கொண்ட மூன்று வாரங்களில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை நல்ல உடல் எடையிலும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. மேலும் இந்த குழந்தையை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது, குழந்தையின் உடலில் உள்ள ரத்தத்தில், இயல்பாகவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் சாட் ரூட்னிக், பால் கில்பர்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில் கூறியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, பிறந்த குழந்தையின் உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி முழுமையாக இருப்பது இதுதான் முதல் முறையாகும். இந்த குழந்தை பிறந்து 28 நாட்களுக்குப் பின் அப்பெண்ணுக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது.
இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தை மற்றும் கருமுட்டை ஆகியவற்றில் மருத்துவர்கள் எதிர்பார்த்த அளவைவிட கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு மட்டுமே முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டது என்றும், தடுப்பூசியை கற்பகாலத்தில் செலுத்துவதன் மூலம் பிறக்கும் குழந்தையின் உடலில் இயல்பாகவே கொரோனா வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.