தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம்!
தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார். அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் அந்த கதவு அவர் சிக்கியுள்ளார். இந்நிலையில் காதவில் சிக்கிய கைதியை பார்த்த போலீஸார் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைத்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் அவரை மீட்டுள்ளனர். மேலும் அந்த கதவு வெட்டி எடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தலைவர் அவர்கள் கூறுகையில், ஒரு கடையில் திருடியதால் இவர் கைது செய்யப்பட்டார். எனவே சந்தேகத்தின் பேரில் தான் இவரை தொடர்ச்சியாக திருடுகிறார் என கைது செய்து காவல் துறையின் காவலில் வைத்து இருந்தோம், இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் இவர் தப்பிக்க முயன்று கதவு துளையில் மாட்டி கொண்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.