என்ன கனி.. பைனலையும் காரக்குழம்பா..? கனியைக் கலாய்த்த ஏ ஆர் ரஹ்மான்..!!

Published by
பால முருகன்

என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் குக் வித் கோமாளி கனியை கலாய்த்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான்.

வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனுக்கான  இறுதிக்கட்டத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நெருங்கியுள்ளது ஆம், வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

இந்த இறுதி போட்டியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஷகிலாவும், பவித்ரா ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். வருகின்ற 14 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியில் கூடுதல் பிரமாண்டமாக இருக்க நடிகர் சிம்பு, இசையமைப்பார் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, பாடகர் அறிவு போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோக்களுக்கும் தினமும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு ப்ரோமோவில் இசையப்புயல் ஏ ஆர் ரஹ்மான் படத்தில் பிசியாக இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் வீடியோ கால் மூலம் அங்குள்ளவர்களிடம் பேசுகிறார். இதில் பேசிய ரஹ்மான் என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று கேட்டு கனியை கலாய்த்துள்ளார். அதற்கு பிறகு தங்கதுரை ஒரு ஜோக் சொல்லுறன் சார் என்று ரஹ்மானிடம் கேட்டார் அதற்கு சிரித்திக்கொண்டே ஓகே பாய் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…

37 minutes ago

தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…

பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…

58 minutes ago

பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!

சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…

2 hours ago

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

14 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

15 hours ago