அடேங்கப்பா என்ன ஒரு பொருத்தம்! அதுல லாஸ்லியா! இதுல கவின்!
- முதலிடத்தை பிடித்த லொஸ்லியா மற்றும் கவின்.
- மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.
கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் லாஸ்லியா மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழில், கடந்த ஆண்டு தொலைக்காட்சியில் அதிகமாக பிரபலமான ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் பெண்கள் பட்டியலில் லொஸ்லியா முதல் இடத்தையும், ஆண்கள் பட்டியலில் கவின் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இதனால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றன.