என்ன ஒரு அடி! பாட்டுலையே பதிலடி கொடுத்த விஜய்!
தன்னை விமர்சித்தவர்களுக்கு பாட்டிலே பதிலடி கொடுத்த விஜய்.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஒரு குட்டி கத என தொடங்கும் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது என்றும், இந்த பாடலுக்கு நடிகர் விஜய் தான் குரல் கொடுக்கிறாரார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து இந்த பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடல் சில மணி நேரங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதனையடுத்து இந்த பாடலில் இடம் பெற்றுள்ள, ‘don’t be the person spreading hatred’ என்ற பாடல் வரியில் காவி நிற கோடி அணிந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.