உயிருடன் ஒதிங்கிய திமிங்கலம்..! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Default Image

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் ஒரு திமிங்கலம் உயிருடன் கரை ஒதிங்கியது.கரை ஒதிங்கிய திமிங்கலம் சில நிமிடங்களில் இறந்து விட்டது.பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த மருத்துவர்கள் திமிங்கலம் இறந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் அந்த திமிங்கலத்தின் வயிற்றை கிழித்து மருத்துவ சோதனை செய்யப்பட்டபோது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது.அதாவது திமிங்கலத்தின் வயிற்றில் 90 கிலோ எடைகொண்ட குப்பைகள் இருந்தது.

இது குறித்து கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஒருவர்  கூறுகையில் ,திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தது பிளாஸ்டிக் பைகள் ,பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் மீன் பிடிக்கும் வலைகள் இருந்தன.

திமிங்கலம் உயிரிழக்க வயிற்றில் இருந்த குப்பைகள் தான் காரணமா என இன்னும் உறுதி செய்யவில்லை.குப்பைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரிய உருண்டை போன்று திமிங்கலத்தின் வயிற்றில் இருந்தது.

திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த குப்பைகள் பெரும்பாலும் மீன் பிடிப்பதற்கு தேவையான பொருள்கள் என கூறினார்.நான் கடற்கரைக்கு சென்றால் கையில் ஒரு பை எடுத்துச் சென்று அங்கிருந்து குப்பைகளை முடிந்தவரை எடுத்து வருவேன் என கூறினார்.

மேலும் மனிதர்களின் அலட்சிய செயலால் எந்த அளவிற்கு எதிர்வினையாற்றும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்