ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மோதியது.இப்போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச்(கேப்டன் ), டேவிட் வார்னர் களமிறங்கினார்.ஆட்டம் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்னிலும் , டேவிட் வார்னர் 3 ரன்னிலும் வெளியேறினார்.
பின்னர் உஸ்மான் கவாஜா களமிறங்கி விளையாட சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார்.பிறகு களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி அணியின் சற்று எண்ணிக்கையை உயர்த்தினார்.பிறகு அலெக்ஸ் கேரி கூட்டணியில் ஸ்மித் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
சிறிது நேரத்தில் அலெக்ஸ் கேரி 45 ரன்னில் வெளியேறினர்.பிறகு களமிறங்கிய நாதன் கொல்டர் , ஸ்மித் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர் 92 ரன்னும், ஸ்மித் 73 ரன்னும் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டையும் , ஆண்ட்ரே ரஸல் , ஓஷேன் தாமஸ் , ஷெல்டன் கோட்ரெல் தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆட்டம் தொடக்கத்திலே 1 ரன்னுடன் வெளியேறினார். கிறிஸ் கெய்ல் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர் ஆனால் அவரின் அதிரடி ஆட்டத்தை சிறிது நேரத்திலே மிட்செல் ஸ்டார்க் கெய்லை 21 ரன்னில் அவுட் ஆக்கினார்.
பின்னர் ஷை ஹோப் , சிம்ரோன் ஹெட்மியர் இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 273 ரன்கள் எடுத்து.15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷை ஹோப் 68 ரன்னும், ஷெல்டன் கோட்ரெல் 51 ரன்னும் குவித்தனர்.ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டையும் , பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டையும் பறித்தனர்.