முதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வங்கியை திறந்த மேற்கு வங்கம்!
முதன் முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே தற்பொழுது கொரோனா நோயால் பாதிக்கப்ட்டுள்ளதுடன், பல லட்சக்கணக்கோனோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோயிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவ துறையால் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து முதன்முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக பிளாஸ்மா வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 15 க்கும் மேற்பட்ட கொரோனாவை வென்ற நோயாளிகள் தங்களது பிளாஸ்மாவையும் அளிக்க முன்வந்துள்ளானராம்.