நல்லடக்கம் செய்யப்பட்ட நடிகர் தவசியின் உடல் – தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த நடிகர்கள்!

நடிகர் தவசியின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது, நடிகர்கள் யாரும் நேரில் செல்ல முடியாததால் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்ததாக தகவல்.
உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசிக்கு, பல நடிகர்கள் தங்களால் இயன்ற பண உதவிகளை செய்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக தவசி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இணையதளம் மூலமாக இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முழுவதும் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவருடன் நடித்த சகநடிகர்கள் உடலை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பருத்திவீரன் படத்தில் அவருடன் நடித்த செவ்வாழை ராசி எனும் துணை நடிகர் மட்டும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மற்ற நடிகர்கள் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்ததாக தகவல்கள் வெல்கியாகியுள்ளது. நேற்று மாலை 5.30 க்கு மேல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.