ஒவ்வொருவருக்கும் தன் உடல் சம்பந்தமாக ஒவ்வொரு பிரச்சனை சிலருக்கு குண்டாக இருப்பது பிரச்சனை, சிலருக்கு ஒல்லியாக இருப்பது பிரச்சனை என கருதுகிறார்கள். இதுவரை எப்படி உடல் எடையை குறைப்பது என பார்த்தோம். இன்று உடல் எடையை எப்படி அதிகரிப்பது என பார்க்கலாம். அதோடு சேர்த்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்து பெறலாம்.
முதலில் வேர்க்கடலை. இதனை தினமும் அரை கப் வறுத்து. அல்லது அவித்து சாப்பிட்டு வந்தால் போதும். அதில் உள்ள புரத சத்து நம் உடல் எடையை அதிகரிக்கவும், நமக்கு நல்ல சத்துக்களையும் கொடுக்க வல்லது. வேர்க்கடலையை மிட்டாயாகவும் சாப்பிடலாம்.
அடுத்து, எள். இளச்சவனுக்கு எள் கொடு என அற்புத பழமொழியே உள்ளது. காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் எளிதில் நம் உடல் எடையை அதிகரிக்கவல்லது. இந்த எள்ளையும் மிட்டாய் போல செய்து சாப்பிடலாம்.
மூன்றாவது உலர் திராட்சை. ஒரு கைப்பிடி உலர் திராட்சை சாப்பிட்டால் போதும். அதில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கிறது. இரும்பு சத்து இருக்கிறது. முடி நரம்புகளை பலப்படுத்துகிறது. இன்னும் பல நல்ல குணங்கள் இருக்கிறது.
கடைசியாக பேரிச்சம்பழம். இதனை தினமும் 10 அல்லது 15 சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பது 15 நாளிலேயே தெரிந்து விடும். மேலும் இது முகப்பொலிவு பிரகாசமாக இருக்கும்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…