யோகி பாபுவுக்கு திருமண வரவேற்பு – முதலமைச்சருக்கு அழைப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு அண்மையில் திடீரென யாருக்கும் அறிவிக்காமல் தனது உறவுக்காரப் பெண் மஞ்சு பார்கவி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு நிச்சயமாக என்னுடைய திருமண வரவேற்புக்கு நான் அனைவருக்கும் சொல்லுவேன் என கூறியிருந்தார்.
அதன்படி தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகி பாபு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். புகைப்படங்கள் இதோ