அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் 207 ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
இன்றைய காலத்தில் கூகுள் தளம் அனைத்து பணியிடங்கள், தொழில் நிறுவனங்கள் மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா இடங்களிலும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் ரூ.207 வாங்கி உள்ளார். அந்த டொமைனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நிக்கோலாஸ் கூறுகையில் கூகுள் என்னை வாங்க அனுமதிக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வலைதளத்தை வரவழைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கூகுள் தளம் டவுன் ஆனதை வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ் மூலம் அவர் தெரிந்து கொண்டுள்ளார். பின் அவர் தனது பிரவுசரில் www.google.com.ar-ஐ உள்ளிட்டேன். ஆனால் அந்த தளம் செயல்படவில்லை.
பின் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்தேன். நெட்வொர்க் தகவல் மையம் (NIC) அர்ஜென்டினாவுக்கு செல்வதற்கு முடிவெடுத்தேன். அப்போது அர்ஜென்டினா கூகுள், டொமைனை வாங்க அனுமதி அளித்தது. இருப்பினும் அது வேலை செய்யாது என்று அவர் நினைத்தேன். ஆனாலும் அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முயற்சி செய்தேன், சற்று நேரத்தில் கொள்முதல் விலை பட்டியலுடன் ஒரு மின்னஞ்சல் வந்தது என தெரிவித்துள்ளார்.
அவர் டொமைன் பெயரை வெறும் £ 2 (ரூ. 207) க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அமெரிக்க நாட்டில் கூகுளின் அனைத்து தேடல்களும் நிக்கோலா குரோனா என்ற வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டது. கூகுள் அர்ஜென்டினா கூகுள் தளம் டவுன் ஆவது குறித்து அறிந்தது. அதனடிப்படையில் சோதனை செய்ததில், நிகோலஸ் இந்த டொமைனை வாங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கூகுள் சற்று நேரத்திலேயே கூகுள் டொமைனை நிக்கோலஸ் குரோனாவிடம் இருந்து மீட்டெடுத்தது.
இதுகுறித்து கூறுகையில் குறுகிய நேரத்துக்கு டொமைன் வேறு ஒருவரால் கையகப்படுத்தப்பட்டது. சற்று நேரத்தில் அதை மீட்டு எடுத்துள்ளோம். எங்களது டொமைன் ஏன் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…