கூகுள் டொமைனை வெறும் ரூ.207-க்கு வாங்கிய வெப் டிசைனர்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

Default Image

அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் 207 ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

இன்றைய காலத்தில் கூகுள் தளம் அனைத்து பணியிடங்கள், தொழில் நிறுவனங்கள் மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா இடங்களிலும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் ரூ.207 வாங்கி உள்ளார். அந்த டொமைனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிக்கோலாஸ் கூறுகையில் கூகுள் என்னை வாங்க அனுமதிக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வலைதளத்தை வரவழைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கூகுள் தளம் டவுன் ஆனதை வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ் மூலம் அவர் தெரிந்து கொண்டுள்ளார். பின் அவர் தனது பிரவுசரில் www.google.com.ar-ஐ உள்ளிட்டேன். ஆனால் அந்த தளம் செயல்படவில்லை.

பின் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்தேன். நெட்வொர்க் தகவல் மையம் (NIC)  அர்ஜென்டினாவுக்கு செல்வதற்கு முடிவெடுத்தேன். அப்போது அர்ஜென்டினா கூகுள், டொமைனை வாங்க அனுமதி  அளித்தது. இருப்பினும் அது வேலை செய்யாது என்று அவர் நினைத்தேன். ஆனாலும் அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முயற்சி செய்தேன், சற்று நேரத்தில் கொள்முதல் விலை பட்டியலுடன் ஒரு மின்னஞ்சல் வந்தது என தெரிவித்துள்ளார்.

அவர் டொமைன் பெயரை வெறும் £ 2 (ரூ. 207) க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அமெரிக்க நாட்டில் கூகுளின் அனைத்து தேடல்களும் நிக்கோலா குரோனா என்ற வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டது. கூகுள் அர்ஜென்டினா கூகுள் தளம் டவுன் ஆவது குறித்து அறிந்தது. அதனடிப்படையில் சோதனை செய்ததில், நிகோலஸ் இந்த டொமைனை வாங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கூகுள் சற்று நேரத்திலேயே கூகுள் டொமைனை நிக்கோலஸ் குரோனாவிடம் இருந்து மீட்டெடுத்தது.

இதுகுறித்து கூறுகையில் குறுகிய நேரத்துக்கு டொமைன் வேறு ஒருவரால் கையகப்படுத்தப்பட்டது. சற்று நேரத்தில் அதை மீட்டு எடுத்துள்ளோம். எங்களது  டொமைன் ஏன் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்