தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது கடுமையாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயில் மக்களை சுட்டு எரித்து வருகிறது.இதனால் மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் கடுமையான வெயில் என்றால் மறுபக்கம் கொல்லும் கொரோனா என்று அசாதாரண சூழ்நிலையை மக்கள் சந்தித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வானிலை குறித்து ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நிலவி வரும் வெப்ப சலனத்தின் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.
இதை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்த ஆய்வு மையம் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெயில் பதிவாகும் இவ்வாறு 40 டிகிரி செல்ஷியஸ் இன்றும், நாளையும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு வேண்டுகோள்:
மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…