3 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!6 மாவட்டத்தை சுட்டு எரிக்கும்

Default Image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது கடுமையாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயில் மக்களை சுட்டு எரித்து வருகிறது.இதனால் மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் கடுமையான வெயில் என்றால் மறுபக்கம் கொல்லும் கொரோனா என்று அசாதாரண சூழ்நிலையை மக்கள் சந்தித்து வரும் நிலையில்  சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வானிலை குறித்து ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நிலவி வரும் வெப்ப சலனத்தின் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.

இதை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்த ஆய்வு மையம் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெயில் பதிவாகும் இவ்வாறு 40 டிகிரி செல்ஷியஸ் இன்றும், நாளையும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மதுரை மற்றும் திருச்சி  ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு வேண்டுகோள்:

மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live rn ravi
Ro hit
JD Vance and modi
AjithKumarRacing
nainar nagendran seeman
Mumbai Indians vs Chennai Super Kings
RCB WIN 2025