ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீபெருபூதூரில், 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவரது உண்மையான பெயர் காயத்ரி ஆகும்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்து 31வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று வரை பல தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்ற்னர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. விசாரணை முடிந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதிகாரிகளின் கூற்றை ஏற்றுக் கொண்டு பேரறிவாளன் பெற்றோர் எந்த அச்சமுமின்றி அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து 31-வது ஆண்டு தொடங்கியுள்ளது. பேரறிவாளன் தனது வாழ்நாளின் பாதி பகுதியை சிறையிலேயே கழித்து விட்டார். தற்போது, பேரறிவாளனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரும், இன்று வரை பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்து தான் வருகின்றனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…