ஒரு பெண் தன் கணவரிடம் ஒருபோதும் சொல்ல மறுக்கும் ரகசியங்கள் பற்றி காண்போம்.
திருமண வாழ்க்கையானது பலருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கணவன்,மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளாத பல ரகசியங்கள் உள்ளன.
குறிப்பாக,பெண்கள் தங்கள் கணவருடன் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை பற்றி அறிய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், திருமணமான ஏழு பெண்களிடம் தங்கள் கணவரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தாத விஷயங்களைப் பற்றி கேட்டது.அப்போது அவர்கள் கூறியதாவது:
முன்னாள் காதலன்:
ஒரு பெண் கூறுகையில்:”என் கணவனை நான் நேசிக்கிறேன்,மதிக்கிறேன் என்றாலும் கூட,சில நேரங்களில் கணவரை முன்னாள் காதலருடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.அது ஆரோக்கியமானதல்ல என்றாலும்,யாரும் சரியானவர் அல்ல என்று தான் உணர்கிறேன்.எனினும்,திருமணமாகி மூன்று மாதங்களான பின்னும்,கடந்த காலத்தை மறந்து நிம்மதியாக வாழ முயற்சிக்கிறேன்.
கடந்த காலம்:
மற்றொரு பெண் கூறுகையில்,”கடந்த காலங்களில் நான் எத்தனை பேரை காதலித்தேன் என்று என்னிடம் கணவர் கேட்டார். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன,நான் கடந்த காலத்தைப் பற்றி பேசினால்,என் கணவர் பாதுகாப்பற்றவராக உணர்கிறார்.
வேலை:
“குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கும்,வீட்டு வேலைகள் செய்வதற்காக தனது வேலையைக் கைவிட்டு விட்டேன்.வீட்டு வேலைகளில் கணவர் உதவி செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், கணவரிடமிருந்து சில பாராட்டுக்களை எதிர்பார்க்கிறேன்”, என்று மற்றொரு பெண் தெரிவித்தார்.
கணவரின் தாய்:
TOI உடன் பேசிய மற்றொரு பெண் கூறுகையில்:”நானும் எனது மாமியாரும் ஒரு நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை.ஏனெனில்,நானும் என் மாமியாரும் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்போது,என் கணவர் எப்போதும் அவர் அம்மாவின் நியாயத்தை மட்டுமே பேசுவார்.இதனால், குடும்பத்தில் சில நேரங்களில் ஒரு அந்நியரைப் போல நான் உணருவதால் சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் அழுகிறேன்”,என்று கூறினார்.
தனது மாமியாரை நேசிப்பது போல நடிப்பது:
நான் எனது மாமியாருடன் ஒரு போதும் உண்மையாக பழகுவதில்லை, மாறாக அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வது போல் நடிகிறேன்.ஏனெனில், அவர் என்னை ஒருபோதும் தனது சொந்த மகளைப் போல நடத்தமாட்டார் என்பதனால்,என் பெற்றோருக்கு செய்வது போலவே அவர்களையும் நேசிக்கவும் பராமரிக்கவும் முடியாது”,என்று தெரிவித்தார்.
உடல் உறவு:
TOI உடன் பேசிய மற்றொரு பெண்,”எனது கணவருடனான உடல் உறவு அவரது மகிழ்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல,அதில் எனது மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது என்று சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்.ஏனெனில்,எனது கணவர் குறைந்த நேரம் மட்டுமே உடலுறவில் ஈடுபடுகிறார்”,எனக் கூறினார்.
வதந்திகள்:
கடைசியாக பேசிய ஒரு பெண்,”எனது தனிப்பட்ட விசயங்களை பற்றி, என் நண்பரிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும்,கணவருக்கு முன்னால் எனது உறவினர்களைப் பற்றியும் பேச விருப்பமில்லை.காரணம் எனது எல்லா ரகசியங்களையும் என் கணவர் அவரது அம்மாவிடம் சொல்கிறார். எனவே,மற்றவர்கள் கூறும் வதந்திகளை நம்பி யாரும் என்னை பற்றி தவறாக நினைப்பதை நான் விரும்பவில்லை”,என்று தெரிவித்தார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…