“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” – பேஸ் புக்…!

Published by
Edison

“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” ,என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இதனைத் தொடர்ந்து,சமூக ஊடகங்கள் அதன் கொள்கையின் ஒரு பகுதியாக,கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் தங்கள் தளங்களில் பரப்பப்படுவதை தடை செய்தன.

இந்நிலையில்,கடந்த 2019-ம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உள்ள மூன்று விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற ஆங்கில இதழ் தெரிவித்ததையடுத்து, கொரோனாவின் தோற்றம் குறித்து வந்த முழுமையான விசாரணைக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனமானது சில கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி,கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்தின் காரணமாக,அந்தக் கொள்கையிலிருந்து நீங்குவதாகவும், பேஸ் புக் தளங்களில் பகிரப்பட்ட,கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,பேஸ் புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்,கொரோனா வைரஸ் தொற்றானது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்லது ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டதாகவே இருந்தாலும்,பேஸ்புக் தனது தளங்களில் வெளியிடப்பட்ட அந்தக் கருத்தை இனி அகற்றாது”, என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

28 mins ago

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…

30 mins ago

பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதலவர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…

37 mins ago

” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…

40 mins ago

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

1 hour ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

1 hour ago