ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் – ஷெல்
உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக, ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்த போவதாக ஷெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவில் செயல்படும் பெட்ரோல் பங்க், விமான எரிபொருள் சேவை போன்றவற்றையும் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.