மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.!
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை இன்று அவர் கொண்டாடி வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் உங்கள் தலைமையின் கீழ் இந்தியா சமூக-பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில் வெற்றிகரமாக நகர்கிறது.
நட்பு உறவுகளை நான் மதிக்கிறேன். உங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடரவும், இருதரப்பு மற்றும் சர்வதேச நிகழ்ச்சியில் தலைப்பு சார்ந்த விடயங்களில் நெருக்கமாக ஒன்றிணைந்து செயல்படவும் நான் எதிர்நோக்குகிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…