மலைபோல் குவியும் ஆர்டர்கள்.. டெலிவர் செய்ய ஒரு லட்ச ஊழியர்கள் தேவை!

Default Image

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகம் முழுவதும்  பரவியுள்ளது. இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

சீன நாட்டு மக்கள் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள காரணத்தினாலே சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது அதே முறையை மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் மக்கள் வீட்டிலே தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அமேசான் போன்ற ஆன்லைன் சேவைகள் மூலம் வாங்கி வருகிறார்கள்.

 ஆடர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் அதனை டெலிவரி செய்ய 1 லட்ச ஊழியர்கள் தேவைப்படுகிறது என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலும் பொருட்களை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்குவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்