வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2 விண்வெளி வீரர்களை, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம், நாசாவை சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகியோர் விண்ணில் பறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் வானிலை சாதகமான சூழ்நிலையில் இல்லாததால், நாசா மாற்றும் ஸ்பேஸ் எக்ஸ், இத்திட்டத்தை தள்ளி வைத்தது.
இந்நிலையில், 2 வீரர்களை சுமந்து கொண்டு இன்று ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து தெரிவித்துள்ள நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன்9 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம். இன்று ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலும், நாளை ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது திட்டமும் உள்ளது என கூறியுள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…