திராட்சை பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம்!
அதிகப்படியான இனிப்பு சுவைக்காக நாம் அடிக்கடி வாங்கி உண்ணக்கூடிய திராட்சை பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. அவைகள் பற்றி நாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
திராட்சை பழத்தின் நன்மைகள்
திராட்சைப் பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை என பல வகைகள் உள்ளது. இதிலும், கருப்பு திராட்சை தான் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது, ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு கருப்பு திராட்சை உண்டு வந்தால் சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்துவிடும்.
மேலும் இந்த கருப்பு திராட்சை மலச்சிக்கலை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் ஆகியவற்றில் உள்ளது, எனவே வயிற்றினை நல்ல முறையில் வைத்திருக்கும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டதுடன் மார்பக புற்று நோயை கட்டுப்படுத்தக் கூடிய பெரும் சக்தி கொண்டது.