இரும்புச் சத்து நிறைந்த இயற்கை வளங்கள் சிலவற்றை அறிவோம்!

Default Image

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முக்கியமாக இரும்புச் சத்துதான் அதிக அளவில் தேவைப்படுகிறது. இரும்புச் சத்துக் குறைபாட்டால் பலவித பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. உடல் உள்ளம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இரும்பு சத்து மிக நல்லது. இரும்பு சத்து நிறைந்த சில பழ வகைகளை பற்றி நாம் இன்று பார்க்கலாம்.

பேரிச்சம் பழம் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்தது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான 50 சதவீத இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் 100 கிராம் மாதுளையில் 3 மில்லி கிராம் இரும்புச் சத்து காணப்படுகிறது. மாதுளை இரும்புச் சத்து நிறைந்த ஒரு பழமாக இருப்பதால் மிகவும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்ககூடியது. இது தவிர மெக்னீசியம் வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி6, சி ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்திப்பழத்தில் உடலுக்கு உறுதியை அளிக்க கூடிய இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது ரத்த சோகை மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சனைகளை நீக்கி, ஆண்மை குறைவான ஆண்களுக்கு விந்தணுக்களின் வளர்ச்சியை அதிகரித்து கொடுக்கிறது. மேலும் கொய்யாப்பழத்திலும் சிறந்த இரும்புச்சத்துக்கள் காணப்படுகிறது. அது தவிர இரவு நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், மெக்னீஷியம் ஆகியவையும் நிறைந்துள்ளது.

மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க கூடிய சக்தியும் கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. மேலும் உலர் திராட்சை அதிக அளவில் இரும்பு சத்தை கொண்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு உலர் திராட்சை உண்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்துவிடும். ஆரோக்கியமும் மேம்படும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவது. கண்பார்வைக் கோளாறுகளை சரிசெய்வதிலும், சரும அழகு மேம்படவும் உதவுகிறது. தர்பூசணி பழத்திலும் அளவு இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. அது தவிர வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் காணப்படுவதால் இளமை தோற்றத்தை தருவதுடன் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிக அளவில் காணப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்