எங்கள் வலிமையை அறிந்தவர்கள் நீங்கள் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் படகுகளை அளிப்போம் என கூறியதால், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வல்லரசு நாடாகிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தொடர்ச்சியாக போர் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா அருகே 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை, துப்பாக்கி இந்திய ஈரானிய படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்கர்களை அச்சுறுத்தக்கூடிய ஈரானிய நாட்டின் படகுகள் அனைத்தும் சுட்டு வீழ்த்தி அளிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது அறிந்த ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி அவர்கள் கூறும் பொழுது, எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறு விளைவித்தல் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எங்கள் வலிமை பற்றி நீங்கள் அறிந்தவர்கள் தான், எனவே முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதில் அடியில் இருந்து பாடம் கற்று இருப்பீர்கள் என கருதுகிறோம் என கூறியுள்ளார். மேலும் 2018 முதல் மீண்டும் போர் சூழல் உண்டாகி வந்த நிலையில் ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசின் சுலைமானி அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றதையும் நினைவுபடுத்தியுள்ளார்.
மேலும் ஈரான் ராணுவம் அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். 78 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் மீது இது தான் ஈரான் நேரடியாக நடத்தப்பட்ட முதல் தாக்குதல். மேலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை கொடுத்து கொண்டு வருகின்ற இந்த நிலையில், இந்த இரு நாடுகள் இடையில் போர் சூழல் உருவாகி வருவது ஆபத்தான ஒரு நிலையாக கருதப்படுகிறது.