குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்கவேண்டியது
குழந்தைகள் என்றவர்கள் நமது கையில் இருக்கும் எந்தவிதமான புரிதலும் இல்லா பொம்மைகள் அவர்களுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டியது மிக நல்ல பழக்கங்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு நாம் அவர்களை நெருங்கும் ஆபத்தில் இருந்து அவர்கள் எவ்வாறு அவர்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனையும் கற்றுகொடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டியது:
குழந்தைகள் என்பவர்கள் தெய்வத்திற்கு ஒப்பாக கருதபடுபவர்கள் இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது பெண்களும் ,பெண்குழந்தைகளும்தான். அவர்களை நாம் எவ்வாறு அந்த ஆபத்தில் இருந்து பாதுகாப்பது என்பதை பற்றி குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தையின் நண்பர்கள்:
குழந்தைகளின் மத்தியில் பெற்றோர்கள் வெறும் பெற்றோர்களாக மட்டும் இருந்துவிடாமல் நண்பர்களாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். குழந்தைகளிடம் பள்ளி சென்றுவந்த பிறகு அவர்களிடம் பள்ளியில் நடந்தவற்றை பற்றி கேட்டறிதல்.
இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏதேனும் பிரச்சனை மற்றும் வேறு விதமான தொல்லைகள் இருந்தால் அதனையும் அவர்கள் கூறிவிடுவார்கள்.
பொருட்களை வாங்க கூடாது:
குழந்தைகளிடம் நாம் கற்று கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களில் இதுவும் ஒன்று.குழந்தைகளை யாரிடத்திலும் பொருட்களை வாங்க அனுமதிக்க கூடாது. அதாவது குழந்தைகள் யாரிடமாவது ஏதாவது பொருட்களை வாங்கி வந்தால் யாரிடமும் எந்த ஒருபொருளையும் வாங்க கூடாது என கண்டியுங்கள்.
மேலும் அம்மா ,அப்பா உன்னிடம் மிட்டாய் கொடுத்து உன்னை அழைத்து வர சொன்னார்கள் என யாராவது உன்னிடம் எதாவது பொருட்களை கொடுத்தால் வாங்ககூடாது எனவும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏதாவது ஒரு code word வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவியாக இருக்கும்.
குழந்தைகளை ஆபத்தில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்:
குழந்தைகளுக்கு வன்கொடுமை நிகழாமல் தடுக்க குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கேட்ட தொடுதல் பற்றி கற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் அவர்களுக்கு கற்று கொடுப்பதால் அவர்களுக்கு நேரும் ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம்.
மேலும் குழந்தைகளை யாராவது இவ்வாறு தவறான முறையில் பயன் படுத்தினால் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கற்று கொடுக்க வேண்டும். மேலும் no சொல்ல கற்று கொடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு குழந்தைகளை தவறான வழியில் பயன் படுத்தும் கொடியவர்களை பற்றி நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ உடனே சொல்லுமாறு கற்று கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது:
பெண்குழந்தைகள் நெருங்கிய உறவினர்களையோ மற்றும் தெரியாத நபர்களையோ தொட்டு பேச அனுமதிக்க கூடாது.
பெண்குழந்தைகளிடம் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துவது மிகவும் நல்லது.
சேமிக்கும் பழக்கம்:
குழந்தைகளுடத்தில் சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் வாழ்வில் சிறக்க சேமிக்கும் பழக்கம் அவர்களுக்கு மிகவும் அவசியம்.